May 28, 2017

ரம்பா திரிதியை (28.05.2017)

Image result for ரம்பா திருதியை வைகாசி

வைகாசி மாத சுக்ல பட்ச திருதியை திதி ரம்பா திருதியை ஆகும். சில சமயங்களில் ஆனி மாதத்திலும் வருவதுண்டு. கார்த்திகை சுக்ல பட்ச திருதியையிலும் சிலர் இவ்விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். இன்று ரம்பா திரிதியை விரதம் கடைபிடிக்கப்படுகிறது. வட இந்தியாவில் இந்த விரதம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

வைகாசி மாத சுக்பல பட்ச திருதியை திதி ரம்பா திருதியை அன்று ரம்பாவிரதம் என்னும் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். ரம்பா என்றால் வாழை என்ற அர்த்தமும் உண்டு. நாலாபுறமும் வாழை மரங்கள் கட்டி, நடுவில் தேவியின் படம் வைத்து நிறைய வாழைப் பழங்களையும் நெய்யில் பக்குவப்படுத்தப்பட்ட பட்சணங்களையும் நிவேதனம் செய்ய வேண்டும். பூஜை செய்த பிறகு பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நிவேதனம் செய்த வாழைப் பழங்களையும் பட்சணங்களையும் தானம் செய்ய வேண்டும்.

பெண்கள் தனியாகவோ கணவருடன் சேர்ந்தோ இந்த ரம்பா விரதம் பூஜைச் செய்யலாம். அருகில் உள்ள அம்மன் சன்னதிகளுக்குச் சென்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து வீட்டுக்கு வந்து ஆரத்தி செய்த பிறகு அணிதல் வேண்டும்.

Related imageஓம் மஹாதேவ்யைச வித்மஹே ருத்ர பத்னியைச தீமஹி
தந்நோ கவுரி பிரசோதயாத் !

என்ற காயத்ரி மந்திரத்தை மூன்று முறை சொல்லி, பெண்கள் சேர்ந்து, மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.

கவுரியே உனக்கு நமஸ்காரம்
கந்தனின் தாயே நமஸ்காரம்
காளினி நீயே நமஸ்காரம்
பொன்னைத் தருவாய் நமஸ்காரம்
பொலிவையும் அருள்வாய் நமஸ்காரம்
பூஜைகள் ஏற்பாய் நமஸ்காரம்

நம் தேசத்தில் கவுரி தேவியின் கோயில்கள், பார்வதி, அம்பிகை, மகாலட்சுமி சன்னதிகளில் ரம்பா திருதியை அன்று விசேட தரிசனங்களைச் செய்து வழிபட்டு வரலாம். குறிப்பாக ரம்பா திருதியை தொடர்புடைய கோயில்களாக கேரளாவில் சேர்த்தலையில் ராஜ கோபுரத்துடன் கூடிய கார்த்தியாயினி கவுரி தேவி, திருவாரூர் மாவட்டத்தில் தில்லையாடி, காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் சன்னதி, தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை கார்த்தியாயனி கோயில், கர்நாடகாவில் மகாலட்சுமி கோயில், தேனி மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி கார்த்தியாயினி, கேரளத்து ஆலப்புழா சாலையில் விசேஷ சன்னதி மும்பை நெருன் 18 அடி உயர கார்த்திகாயினி ரூபம். தென்சென்னையில் குன்றத்தூர், சென்னை - திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி ஆகிய இடங்களில், விசேட அலங்கார தரிசன சேவை செய்யலாம்.

பலன்கள்:
  • இந்த பூஜை செய்வதால் நல்ல கணவன், நீண்ட ஆயுள், நல்ல குழந்தை, நல்ல வீடு, முதலியவற்றை அடைவார்கள். 
  • திருமணமான பெண்களும், திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருப்பது மிகுந்த பலனைத் தரும். இந்த நாளில் தங்கத்தை வாங்குவதும் வாங்கிய தங்கத்தை அணிந்து லட்சுமியை வணங்குவது மிகவும் சிறப்பானது.
  • இந்த நாளில் கன்னிப் பெண்கள் லட்சுமி தேவியை பூஜை செய்து வணங்கினால் திருமணத்துக்குத் தேவையான தங்க நகைகள் சேரும் என்பது நம்பிக்கை.
  • பெண்களுக்கு அழகும் முகவசீகரமும், தங்க நகை சேரும் பாக்கியமும் கிடைக்கும். பரத நாட்டியம், மற்ற ஆடல் கலைகளில் மிளிர்ந்திட, இந்த நாளில் கவுரி பூஜையுடன் ரம்பாதேவி பூஜையும் செய்யவேண்டும். 
முத்தாரம்மே சரனம் !

Shared by Mutharamman Satsangam




May 10, 2017

முத்தாரம்மன் திருக்கோவிலில் சித்திரை வசந்த விழா (11.05.2017, 12.05.2017)


உத்தராயண காலத்தின் (தை- ஆனி) நடுவில் வருவது வசந்த ருது (சித்திரை). தட்சிணாயண காலத்தின் (ஆடி- மார்கழி) நடுவில் வருவது சரத் ருது (புரட்டாசி). இவ்விரு பருவ காலங்களும் எமதர்மனின் இரு கோரைப்பற்களைக் குறிக்கும் என்று தேவி பாகவதம் சொல்கிறது. இக்காலங்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை. அவற்றிலிருந்து  நம்மை காப்பாற்றுபவள் அம்பிகை என்பதால், அவளுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு செய்யும் வழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். எனவே, சித்திரையில் வசந்த விழா, புரட்டாசியில் தசரா விழா என்று மிகவும் சிறப்பாக தேவிக்கு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

ஆறு ருதுக்களில் சிறந்ததாக சொல்லப்படும் வசந்த ருதுவில், முத்தாரம்மைக்கு நடத்தப்படுவது வசந்த விழா.

அவ்வகையில், இவ்வருடம் குலசேகரப்பட்டிணம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில், சித்திரை வசந்த விழா 11.05.2017, 12.05.2017 ஆகிய இரு தினங்களிலும் கொண்டாடப்படுகிறது.

Image result for homam
மே 11-ம் தேதி காலை 7.30 மணிக்கு விக்நேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கி, தொடர்ந்து புண்யாஹவாசனம், கணபதி ஹோமம், சிறப்பு தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

Image result for sumangali pujaஅதனைத் தொடர்ந்து, 9 மணிக்கு, குபேர ஹோமம், நவக்ரஹ ஹோமம், கோ பூஜை, லக்ஷ்மி ஹோமம், ஆகியவை நடைபெறுகிறது.

பின்னர், 1008 கலச பூஜை, திருமுறை பாராயணம், ஸ்வாமி அம்பாளுக்கான ஹோமங்கள் நடைபெறும். பகல் 12 மணிக்கு, 1008 கலசாபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் நடைபெறும். மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜை நடைபெறுகிறது.


Image result for sangu abhishekamமே 12-ம் தேதி காலை 6 மணிக்கு 1008 பால்குடம் கடற்கரையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும்.

Image result for Maa vilakkuபின்னர்,  பகல் 12 மணிக்கு, 1008 சங்காபிசேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும், திருமண தோஷம் விலக சிறப்பு பூஜையும் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு 5004 மாவிளக்கு பூஜை நடைபெறும்.

சித்திரை வசந்த விழாவில் அன்னையை வணங்கி நல்வாழ்வு பெறுவோம்.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam




சித்ரா பௌர்ணமி (10.05.2017)

Related imageசித்திரை மாதத்தில் பௌர்ணமி திதியும்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும், நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது

இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது.

இத்தினத்தில் ஆலயங்களிலே குறிப்பாக அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது. சில ஆலயங்களில் பொங்கல் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

Image result for chitra pournamiஅம்மனுக்குச் சிறப்புப் பொருத்திய இச்சித்திரா பௌர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.

ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர் சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.

எமதர்மனின் கணக்கரான சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பௌர்ணமி நாளில் தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றம் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

Image result for chitra pournamiகள்ளழகர் மதுரை வைகையாற்றில் சித்திரை மாத பவுர்ணமியில் விழா காண்கிறார்.
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் வெகு விஷேஷம்.

குற்றாலத்தில் செண்பகதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்பொழுது மஞ்சள் மழை பெய்யும்.

அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.

வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.

உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி அன்று தேவியை பணிந்து நல்வாழ்வு பெறுவோம் !

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

May 2, 2017

கங்காஷ்டகம்

Related image

கங்காதேவி மீது ஆதிசங்கரர் பாடிய அஷ்டகத்தை சித்த மனத்துடன் பாராயணம் செய்தால், பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.



1.பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-

கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!

அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்

விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!!

பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ, தொடுகிறார்களோ, அவர்கள் தேவலோக சுகம் பெறுவர் (கலிகல்மஷம் பாதிக்காமல்)

2.ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ

ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ!

க்ஷோணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ

பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது!!

ப்ரும்மாண்டத்தை உடைத்துக் கொண்டும், ஸ்ரீ பரமேச்வரனின் ஜடாவல்லியை கிளு கிளுக்கச் செய்து கொண்டும், ஸ்வர்கத்திலிருந்து கீழே இறங்கி மேருமலைக் குகையின் பக்கத்து குன்றிலிருந்து விழுந்தோடி பூமியில் புரண்டு, மக்களின் பாப பட்டாளத்தை விரட்டியடித்து, பின் சமுத்திரத்தில் கலந்து நிரப்பிக்கொண்டுமிருக்கிற புண்யகங்கை நம்மை பரிசுத்தப்படுத்தட்டும்.

3.மஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்

ஸ்நாநை:ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மி

ஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:சன்ன தீரஸ்தநீரம்

பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம் II

யானை தும்பிக்கையும், முதலைகளும் அலை வேகத்தை சற்றே தடுக்க, ஒடும் கங்கை ப்ரவாஹம் நம்மை காப்பதாக!அது, மூழ்கும் யானைகளின் காதோரம் ஜலப்பெருக்கால் வாசனை பெற்றதால் வண்டு மொய்க்கும் தண்ணீரையுடையது. குளிக்கும் சித்தர் பெண்களின் மார்பகத்திலிருந்து குங்குமம் கரைந்து மஞ்சள் நிறமுள்ளது. காலை மாலை வேளைகளில் முனிவர் பூஜை செய்வதால், தர்பை, புஷ்பம் ஆகியவை கரையோரம் தண்ணீர் மிதக்கின்றன.

4.ஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்

பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:பாபோதகம் பாவனம்!

பூய:சம்புஜடா விபூஷணமணி:ஜஹ்நோர்மஹர் ஷேரியம்

கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாது மாம் !!

முதலில் பிரம்மதேவன் செய்யும் அனுஷ்டான பாத்திரத்தில் சுத்தஜலமாகவும், பிறகு, சேஷசாயியான ஸ்ரீமந் நாராயணரின் பாதோதகமாகவும், பின்னும், பரமேச்வரன் ஜடா மகுடத்தில் அலங்காரமணியாகவும், திகழ்ந்த ஜஹ்னுமஹர்ஷியின் மகளான கங்கை பாபத்தைப் போக்கி என்னைக் காக்கட்டும்.

5.சைலேந்த்ரா தவதாரிணீ நிஜஜலே மஜ்ஜத் ஜனோத்தாரிணீ I

பாராவாரவிஹாரிணீ பவபயச்ரேணீ ஸமுத்ஸாரிணீ I

சேஷாஹேரனு காரிணீ ஹரசிரோ வல்லீதலாகாரிணீ

காசீப்ராந்த விஹாரிணீ விஜயிதே கங்கா மநோஹாரிணீமிமி

காசீயருகில் ஒடி விளையாடும் அழகிய கங்கை ஹிமயமலையில் உற்பத்தியாக, தனது ஜ்லப்ரவாஹத்தில் மூழ்கிய ஜனங்களை உய்வித்து, சம்சாரபயம் நீங்கி, கடலோடு கலக்கிறது. அது ஆதி சேஷன்போல், பரமேச்வரன் தலையில் பில்வதளம் போல் விங்குகிறது.

6.குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்

த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி!

த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்

ததா மாதச் சாதக்ரதவபதலாபோsப்யதிலகு: !!

ஹே கங்கைத்தாயே!உனது தண்ணீர் அலை பட்டுவிட்டாலே போதும் வீழ்ச்சி கிடையாது. சற்று பருகினாலே வைகுண்ட லோக வாஸத்தை அருளுகிறாய். உனது பிரவாஹத்தில் ஸ்னாநம் செய்தவருக்கு இந்திரபதவி கூட எளிதாயிற்றே!

7.பகவதி தவ தீரே நீரமாத்ராசனோsஹம்

விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி !

ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே

தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத !!

ஹே கங்காதேவி!பகவதி!மினுமினுப்பான அலைகள் கொண்டவளே!ஸகலபாபங்களையும் அகற்றுபவளே!ஸ்வாகத்தின் படிக்கட்டாக அமைந்தவளே!எனக்கு மனமிரங்கமாட்டாயா?உனது கரையோரம் உன் நீரை மட்டும் பருகிக்கொண்டு, பற்று அற்றவனாய், ஸ்ரீகிருஷ்ணனை ஆராதிக்கிறேனே!அனுமதியேன்.

8.மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே மௌலௌ நிதாயாஞ்ஜலிம்

த்வத்தீரே வபுக்ஷே£sவஸானஸமயே நாராயணாங்கரித்வயம் !

ஸாநந்தம் ஸ்மரதோ பவிஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே

பூயாத் பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ !!

கங்காமாதாவே!ஸ்ரீசங்கரரின் தொடர்புடையவளே!உன்னை பிரார்த்திக்கிறேன். உனது கரையில் தங்கி தலை மேல் கைகூப்பிக்கொண்டு, உடல் பட்டுப்போகும் நேரத்தில் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை தியானித்துக்கொண்டு ஆனந்தமாய் கழிக்கும் நேரம் பிராணவியோகமும் நேரலாம். அப்பொழுது ஹரியும்,

ஹரனும் ஒன்று, என்றே அசையாத (நிலையான) பக்தி எனக்கு உண்டாக வேண்டுமே.

9.கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி

ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி !!

புண்ணியமான இந்த கங்காஷ்டகத்தை சித்த சுத்தியுடன் படிப்பவர் பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.

கங்காஷ்டகம் முற்றிற்று.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

கங்கா ஜயந்தி / கங்கா சப்தமி (02.05.2017)

Image result for ganga saptami 2017

நதிகள் என்று சொன்னாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கங்காதான். நதிகளிலெல்லாம் மிகவும் உயர்ந்ததாகவும், புண்ணியமிக்கதாகவும் கருதப்படுவது கங்கா. அதில் நீராடினால் எல்லா பாபங்களும் விலகிவிடும் என்கின்றன புராணங்கள்.

புராணங்களின் கூற்றுப்படி மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டபோது, அவன் அவ்வாறே கொடுக்க இசைந்தான். பகவான், திரிவிக்கிரமனாக மாறி, ஒரு காலடியால் பூலோகத்தையும், மற்றொரு காலடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் அல்லவா? அப்படி அவர் பாதம் பிரம்ம லோகத்தில் பட்டபோது, பிரம்மா அப்பாதம் யாருடையது என்று தெரிந்து, தன்னிடமுள்ள தீர்த்தத்தினால் அப்பாதங்களைக் கழுவி, அதைத் தன் கையிலுள்ள கமண்டலத்தில் வைத்துக் கொண்டாராம். அதுவே கங்கையாகும். பகவான் காலடி ஸ்பரிசம் பட்டதால் அந்த கங்கா நீருக்கு இவ்வளவு மகிமை. 

Related imageதேவலோகத்தில் இருந்த அந்த கங்கையை, மிகுந்த பிரயத்தனத்துக்குப் பின் சூர்ய வம்சத்து அரசன் பகீரதனால் தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்தாள். அதனால் அவளுக்கு பகீரதி என்றும் பெயரும் ஏற்பட்டது. அவள் பூமிக்கு வந்த திருநாளையே, கங்கா தசரா என்று வைகாசி மாதம், சுக்ல பட்சத்தில்நா கொண்டாடுகிறோம்.

கங்கா சப்தமி அல்லது கங்கா ஜயந்தி என்பது, கங்கை ஜஹ்னு முனிவரால் உள்ளிழுக்கப்பட்டு அவரின் காது வழியே ‘ஜாஹ்னவி’ என்ற பெயரில் வெளிப்பட்ட நாள். 

இந்த கங்கா சப்தமியில், கங்கா நதியில் நீராடுவது மிகவும் சிறந்தது. இயலாதவர்கள் கங்கா ஜலத்தினால் தன்னை புரோட்சித்துக் கொண்டோ, அதுவும் முடியவில்லை என்றால் நாம் குளிக்கும் தண்ணீரில் கங்கை வந்திருப்பதாக எண்ணி ‘கங்கா கங்கா’ என்று சொல்லிக் கொண்டே நீராட வேண்டும். பிறகு கங்கா தேவியின் சிலைக்கு (கங்கா தேவி வெள்ளை வஸ்திரம் தரித்து, வெள்ளைத் தாமரை மலரில் மூன்று கண்களும், பல கைகளும் உடையவளாக) பூஜைகள் செய்ய வேண்டும். பூஜையின்போது கட்டாயம் இமவான், பகீரதன் ஆகிய அரசர்களை நினைத்துக் கொள்ள வேண்டும்.

கங்கையில் நீராடி, மனதளவில் தாம் செய்த பாபங்களை நினைத்து வருந்தினால் அந்தப் பாபங்கள் நீங்கும் என்கின்றன புராணங்கள். தவிர, மீண்டும் இத்தகைய பாவங்களைச் செய்யக் கூடாது. 


பகவத்கீதா கிஞ்சித் அதீதா
கங்கா ஜலலவ கணிகா பீதா
ஸக்ருதபி ஏன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேந சர்ச்சா

என்று ’பஜகோவிந்த’த்தில் சொல்கிறார். ‘எவன் கொஞ்சமாவது கீதா பாராயணம் பண்ணி, துளியாவது கங்கா தீர்த்தத்தைப் பானம் பண்ணி, ஒரு தடவையாவது முராரிக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ அவனுக்கு யமனிடம் வியவஹாரம் ஒன்றுமில்லை என்று பகவத்பாதாள் சொல்கிறார்.

கண்ணனும், நதிகளில் தான் கங்கா என்று கீதையில் சொல்லியிருக்கிறார். இவ்வளவு மகிமை வாய்ந்த கங்கையில் நீராடினால் மட்டும் போதாது. அதன் மகத்துவமும் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் நம் பாவங்கள் தீரும். இதை ஒரு கதை கொண்டு விளக்குகிறேன்.

கைலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, மக்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களில் எல்லொரது பாவமும் போய்விடுமா? ….. என்பதுதான் அந்த கேள்வி.

சிவபெருமானோ அதற்கான பதிலை ஒரு சிறு நாடகமாக நடத்தி காட்ட எண்ணி பார்வதி என்ன செய்யவேண்டும் என்று கூறினார். அதன்படி சிவன் வயதான ரிஷி போலவும், பார்வதி ரிஷி பத்தினியாகவும் மாறினார்கள். கங்கையில் தீர்த்தமாடி வரும் வழியில் சிறு பள்ளம் தோன்றச் செய்து சிவன் அதில் விழ்ந்து தத்தளித்தபடியும், பார்வதிதேவி பள்ளத்தின் அருகே நின்று தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டு கத்தியபடி இருந்தார்.

கங்கையில் குளித்துவிட்டு வந்த பலர் பள்ளத்தில் கிடந்த சிவனை வெளியே தூக்க வந்தபோது பார்வதிதேவி தனது கணவர் ஒரு உத்தமமான ரிஷி என்றும் அவரை பாவம் செய்தவர் தொட்டால் மறுகணமே சாம்பலாகி விடுவார்கள் என்று கூறி எச்சரிக்கை செய்தார். இதனால் உதவ வந்த அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர். அப்பொழுது ஒருவன் துணிந்து வந்து பள்ளத்தில் இருந்தவரை தூக்க முனைந்தான். பார்வதி தேவியார் அவனையும் எச்சரிக்கை செய்தார். ஆனால் அவன் தான் இப்பொழுதுதான் கங்கையில் நீராடி வருவதாகவும் தன்னுடைய பாவமெல்லாம் கங்கையில் கரைந்து விட்டது என்று உரைத்து அவரைத் தூக்க பள்ளத்தில் இறங்கினான். அவனது பதிலைக் கேட்டு சிவனும், சக்தியும் மகிழ்ந்து அவனுக்கு சுய உருவில் காட்சி தந்து ஆசி கூறி மறைந்தனர்.

இதிலிருந்து நம்பிக்கையோடு கங்கையில் நீராடுபவர்களுக்குத்தான் அவர்களது பாவம் போகும் என்ற உண்மையை பார்வதி தேவியார் உணர்ந்து கொண்டார்.

எனவே, கங்கையின் மகத்துவத்தையும் அறிந்து போற்றுவோம்!

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam