Showing posts with label அஷ்டகம். Show all posts
Showing posts with label அஷ்டகம். Show all posts

Sep 25, 2017

சாரதா புஜங்க பிரயாதாஷ்டகம்

                                      Image result for sharadamba

ஸூவசேக்ஷோஜ கும்பாம் ஸூதாபூர்ணகும்பாம்
ப்ரஸாதவ வலம்பாம் ப்ரபுண்யாவலம்பாம்
ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதானோஷ்ட்டபிம்பாம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

கடாக்ஷே தயார்த்ராம் கரே ஜ்ஞானமுத்ராம்
கலாபிர்விநித்ராம் கலாபைஸ்ஸூபத்ராம்
புரஸ்த்ரீம் விநித்ராம் புரஸ்துங்க பத்ராம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

லலாமாங்கபாலாம் லஸத்காநலோலாம்
ஸ்வபக்தைகபாலாம் யசச்ரீகபோலாம்
கரே த்வக்ஷமாலாம் கனத்ப்ரத்னலோலாம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

ஸூஸீமந்தவேணீம் த்ருசாநிர்ஜிதைணீம்
ரமத்கீரவாணீம் நமத்வஜ்மரபாணீம்
ஸூதாமந்தராஸ்யாம் முதா சிந்த்யவேணீம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

ஸூசாந்தாம் ஸூதேஹாம் த்ருகந்தே கசாந்தாம்
லஸத்ஸல்லதாங்கீ மனந்தாமசிந்த்யாம்
ஸ்மரேத்தாபஸை ஸர்கபூர்வஸ்த்திதாம் தாம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

குரங்கே துரங்கே ம்ருகேந்த்ரே ககேந்த்ரே
மராளே மதேபே மஹோ÷க்ஷ(அ)திரூடாம்
மஹத்யாம் நவம்யாம் ஸதா ஸாமரூபாம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

ஜ்வலத் காந்தி வன்ஹிம் ஜகன்மோஹனாங்கீம்
பஜேமானஸாம்போஜஸூப்ராந்தப்ருங்கீம்
நிஜஸ்தோத்ர ஸங்கந்ருத்யப்ரபாங்கீம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

பவாம்போஜ நேத்ராப்ஜ ஸம்பூஜ்யமானாம்
லஸன் மந்தஹாஸ ப்ரபாவக்த்ர சின்ஹாம்
சலச்சஞ்சலா சாருதாடங்க கர்ணாம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்.

Sep 23, 2017

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

                            Image result for lakshmi


1. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

2. நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

3. ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

4. ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

5. ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

6. ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

7. பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

8. ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே3.
ஜகத்ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

9. மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

10. ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம்
த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:

11. த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா


Sep 22, 2017

ஸ்ரீ திரிபுரசுந்தரி அஷ்டகம்

                                         Related image

கதம்பவநசாரிணீம் முநிகதம்பகாதம்பிநீம்
நிதம்பஜிதபூதராம் ஸூரநிதம்பிநீஸேவிதாம்
நவாம்புருஹலோசனாம் அபிநவாம்புதச்யாமலாம்
த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுரஸூந்தரி மாச்ரயே

கதம்பவநவாஸிநீம் கநகவல்லகீதாரிணீம்
மஹார்ஹமணி ஹாரிணீம் முகஸமுல்லஸ த்வாருணீம்
தயாவிபவகாரிணீம் விசதலோசநீம் சாரிணீம்
த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுரஸூந்தரி மாச்ரயே

கதம்ப வநசாலயா குசபரோல்லஸன்மாலயா
குசோபமிதசைலயா குருக்ருபாலஸத்வேலயா
மதாருணகபோலயா மதுரகீதவாசாலயா 
கயாபி கநநீலயா கவசிதா வயம் லீலயா

கதம்ப வந மத்யகாம் கநக மண்டலோபஸ்த்திதாம்
ஷடம்புருஹவாஸிநீம் ஸதத ஸித்த ஸெளதாமினீம்
விடம்பித ஜடாபாரருசிம் விகசசந்த்ரசூடாமணிம்
த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுரஸூந்தரி மாச்ரயே

குசாஞ்சிதவிபஞ்சிகாம் குடில குந்தலாலங்க்ருதாம்
குசேசய நிவாஸிநீம் குடில ஸித்த வித்வேஷிணீம்
மதாருணவிலோசநாம் மநஸிஜாரி ஸம்மோஹிநீம்
மதங்க முனிகன்யகாம் மதுரபாஷிணீ மாச்ரயே

ஸமரேத் ப்ரதமபுஷ்பிணீம் ருதிரபிந்து நீலாம்பராம்
க்ருஹீத மது பாத்ரிகாம் மது விகூர்ண நேத்ராஞ்சலாம்
கந ஸ்தந பரோந்நதாம் கலிதசூலிகாம் ச்யாமலாம்
த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுரஸூந்தரி மாச்ரயே

ஸகுங்குமவிலேபனாம் அலிகசும்பிகஸ்தூரிகாம்
ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸசரசபபாசாங்குசாம்
அசேஷ ஜந மோஹிநீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸூம பாஸூராம் ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம்

புரந்தர புரந்த்ரிகாம் சிகுரபந்தஸைரந்த்ரிகாம்
பிதாமஹபதிவ்ரதாம்படுபடீர சர்ச்சாரதாம்
முகுந்த ரமணீ மணீ லஸதலங்க்ரியாகாரிணீம்
பஜாமி புவநாம்பிகாம் ஸூரவதூடிகா சேடிகாம்.

Sep 21, 2017

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்

Image result for raja rajeswari

1. அம்பா சாம்பவி சந்த்ரமௌலி அபலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹைமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ
ஸாவித்ரீ நவயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய-லக்ஷ்மீ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

2. அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனீ ஆனந்த-ஸந்தாயினீ
வாணீ-பல்லவ-பாணி-வேணு-முரளீ-கானப்ரியா-லோலினீ
கல்யாணீ உடுராஜபிம்ப-வதனா தூம்ராக்ஷ-ஸம்ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

3. அம்பா-நூபுர-ரத்ன-கங்கண-தரீ கேயூர-ஹாராவலீ
ஜாதீ-சம்பக-வைஜயந்தி-லஹரீ-க்ரைவேயகை-ராஜிதா
வீணா-வேணு-விநோத-மண்டித-கரா வீராஸனே ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

4. அம்பா ரௌத்ரிணி பத்ரகாளி பகலா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மானோஜ்ஜ்வலா
சாமுண்டாச்ரித-ரக்ஷ-போஷ-ஜநநீ தாக்ஷாயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

5. அம்பா சூல-தனு:-குசாங்குச-தரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப-ப்ரசமனீ வாணீ-ரமா-ஸேவிதா
மல்லாத்யாஸுர-மூகதைத்ய-மதனீமாஹேச்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

6. அம்பா ஸ்ருஷ்டி-விநாச-பாலனகரீ ஆர்யா விஸம்சோபிதா
காய்த்ரீ ப்ரணவாக்ஷர அம்ருதரஸ: பூர்ணானுஸந்தீ-க்ருதா
ஓங்காரீ விநதாஸுதார்ச்சித பதா உத்தண்ட-தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

7. அம்பா சாச்வத-ஆகமாதி-வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி-பிபீலிகாந்த-ஜநநீ யா வை ஜகன்மோஹினீ
யா பஞ்சப்ரணவாதி-ரேபஜனனீயா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

8. அம்பா-பாலித-பக்தராஜ-தனிசம் அம்பாஷ்டகம் ய:படேத்
அம்பா-லோக-கடாக்ஷ வீக்ஷே-லலிதஞ்ச ஐச்வர்யமவ்யாஹதம்
அம்பா பாவன-மந்த்ர-ராஜ-படனா தந்தே ச மோக்ஷ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

Aug 6, 2017

ஸ்ரீ கோமதி அஷ்டகம் ( ஆடி தபசு சிறப்பு பதிவு )

ஸம்ஸாரமாகிற வியாதியிலிருந்தும் ரோகபாதைகளிலிருந்தும் காக்கக் கூடியவள் ஸ்ரீ கோமதி அன்னை, இவள், சுபமங்களங்களைக் கொடுப்பாள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லாது, இவளை நாம் தினமும் ஸ்மரித்து இந்த அஷ்டகத்தைப் பாராயணம் செய்து வரவேண்டும்.

அஷ்டகம்
லக்ஷ்மிவாணி நிஷேவிதாம்புஜபதாம்
லாவண்யசோபாம் சிவாம்
லக்ஷ்மீவல்லப பத்மஸம்பவநுதாம்
லம்போ தரோல்லாஸினீம்
நித்யம்கௌசிக வந்த்யமான
சரணாம் ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீபுந்நாக வநேச்வரஸ்ய மஹிஷீம்
த்யாயேத் ஸதா கோமதீம்

தேவீம்தாநவராஜ தார்பஹரீணீம்
தேவேந்த்ர ஸம்பத்பரதாம்
கந்தர்வோரக யக்ஷஸேவித பதாம்
ஸ்ரீசைலமத்ய ஸ்திதாம்
ஜாதி சம்பக மல்லிகாதி குஸுமை:
ஸம்சோபிதாங்க்ரி த்வயாம்
ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம்
த்யாயேத் ஸதா கோமதீம்

உத்யத்கோடி விகர்தந த்யுதி
நிபாம்ஒளர்வீம் பவாம்போநிதே:
உத்யத் தாரக நாத துல்யவதநாம்
உத்யோ தயந்தீம் ஜகத்
ஹஸ்த ந்யஸ்த சுக ப்ரணாத
ஸுஹிதாம் ஹர்ஷப்ரதாம் அம்பிகாம்
ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதீம்

கல்யாணீம் கமநீய ரத்னகசிதாம்
கர்பூர தீபோஜவலாம்
கர்ணாந்தாயத லோசனாம்
கலரவாம் காமேச்வரீம் சங்கரீம்
கஸ்தூரீ திலகோஜ்வலாம்
ஸகருணாம் கைவல்ய ஸெளக்யப்ரதாம்
ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதீம்

வைடூர்யாதி ஸமஸ்த ரத்னகசிதே
கல்யாண ஸிம்ஹாஸநே
ஸ்தித்வா அசேஷஜநஸ்ய
பாலனகரீம் ஸ்ரீராஜராஜேச்வரீம்
பக்தாபீஷ்டபலப்ரதாம் பயஹராம்
பண்டஸ்ய யுத்தோத்ஸுகாம்
ஸ்ரீபுந்நாக வநேச்வரஸ்ய மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதீம்

சைலாதீச ஸுதாம் ஸரோஜநயநாம்
ஸர்வரோக வித்வம்ஸிநீம்
ஸந்மார்க ஸ்தித லோக ரக்ஷ ஜநநீம்
ஸர்வேச்வரீம் சாம்பவீம்
நித்யம் நாரத தும்புரு ப்ரப்ருதிபி:
வீணாவிநோத வநேச்வரஸ்ய மஹிஷீம்
த்யாயேத் ஸதா கோமதீம்

பாபாரண்ய தவாநலாம் ப்ரபஜதாம்
பாக்யப்ரதாம் பக்திதாம்
பக்தாபத்குலசைல பேதந பவிம்
ப்ரத்க்ஷமூர்திம் பராம்
மார்கண்டேய பராசராதி
முநிபி: ஸம்ஸ்தூயமாநாம் உமாம்
ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதீம்

சோராரண்ய நிவாஸிநாம் ப்ரதிதினம்
ஸ்தோத்ரேண பூர்ணாலயாம்
த்வத் பாதாம்புஜ பூர்ணஸக்த
மநஸாம் ஸ்தோகே தரேஷ்டப்ரதாம்
நாநாவாத்ய ரவைச்ச சோபித்பதாம்
நாராயணஸ்யாநுஜாம்
ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதீம்

பூகைலாசேமனோக்ஞே
புருஷநவ்ருதே நாக தீர்தோபகண்டே
ரத்நப்ராஸாதமத்யே ரவிஸத்ருச
மஹாயோக பீடேநிஷண்ணம்
ஸம்ஸாரவ்யாதிவைத்யம்
ஸகலஜநநுதம் சங்கபத்மார்சிதாங்க்ரிம்
கோமத்யம்பாஸமேதம்
ஹரிஹரவபுஷம் சங்கரேசம் நமாமி
ஸ்ரீ கோமத்யஷ்டகம் ஸம்பூர்ணம்.

முத்தாரம்மன் சத்சங்கம்

May 2, 2017

கங்காஷ்டகம்

Related image

கங்காதேவி மீது ஆதிசங்கரர் பாடிய அஷ்டகத்தை சித்த மனத்துடன் பாராயணம் செய்தால், பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.



1.பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-

கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!

அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்

விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!!

பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ, தொடுகிறார்களோ, அவர்கள் தேவலோக சுகம் பெறுவர் (கலிகல்மஷம் பாதிக்காமல்)

2.ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ

ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ!

க்ஷோணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ

பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது!!

ப்ரும்மாண்டத்தை உடைத்துக் கொண்டும், ஸ்ரீ பரமேச்வரனின் ஜடாவல்லியை கிளு கிளுக்கச் செய்து கொண்டும், ஸ்வர்கத்திலிருந்து கீழே இறங்கி மேருமலைக் குகையின் பக்கத்து குன்றிலிருந்து விழுந்தோடி பூமியில் புரண்டு, மக்களின் பாப பட்டாளத்தை விரட்டியடித்து, பின் சமுத்திரத்தில் கலந்து நிரப்பிக்கொண்டுமிருக்கிற புண்யகங்கை நம்மை பரிசுத்தப்படுத்தட்டும்.

3.மஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்

ஸ்நாநை:ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மி

ஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:சன்ன தீரஸ்தநீரம்

பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம் II

யானை தும்பிக்கையும், முதலைகளும் அலை வேகத்தை சற்றே தடுக்க, ஒடும் கங்கை ப்ரவாஹம் நம்மை காப்பதாக!அது, மூழ்கும் யானைகளின் காதோரம் ஜலப்பெருக்கால் வாசனை பெற்றதால் வண்டு மொய்க்கும் தண்ணீரையுடையது. குளிக்கும் சித்தர் பெண்களின் மார்பகத்திலிருந்து குங்குமம் கரைந்து மஞ்சள் நிறமுள்ளது. காலை மாலை வேளைகளில் முனிவர் பூஜை செய்வதால், தர்பை, புஷ்பம் ஆகியவை கரையோரம் தண்ணீர் மிதக்கின்றன.

4.ஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்

பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:பாபோதகம் பாவனம்!

பூய:சம்புஜடா விபூஷணமணி:ஜஹ்நோர்மஹர் ஷேரியம்

கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாது மாம் !!

முதலில் பிரம்மதேவன் செய்யும் அனுஷ்டான பாத்திரத்தில் சுத்தஜலமாகவும், பிறகு, சேஷசாயியான ஸ்ரீமந் நாராயணரின் பாதோதகமாகவும், பின்னும், பரமேச்வரன் ஜடா மகுடத்தில் அலங்காரமணியாகவும், திகழ்ந்த ஜஹ்னுமஹர்ஷியின் மகளான கங்கை பாபத்தைப் போக்கி என்னைக் காக்கட்டும்.

5.சைலேந்த்ரா தவதாரிணீ நிஜஜலே மஜ்ஜத் ஜனோத்தாரிணீ I

பாராவாரவிஹாரிணீ பவபயச்ரேணீ ஸமுத்ஸாரிணீ I

சேஷாஹேரனு காரிணீ ஹரசிரோ வல்லீதலாகாரிணீ

காசீப்ராந்த விஹாரிணீ விஜயிதே கங்கா மநோஹாரிணீமிமி

காசீயருகில் ஒடி விளையாடும் அழகிய கங்கை ஹிமயமலையில் உற்பத்தியாக, தனது ஜ்லப்ரவாஹத்தில் மூழ்கிய ஜனங்களை உய்வித்து, சம்சாரபயம் நீங்கி, கடலோடு கலக்கிறது. அது ஆதி சேஷன்போல், பரமேச்வரன் தலையில் பில்வதளம் போல் விங்குகிறது.

6.குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்

த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி!

த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்

ததா மாதச் சாதக்ரதவபதலாபோsப்யதிலகு: !!

ஹே கங்கைத்தாயே!உனது தண்ணீர் அலை பட்டுவிட்டாலே போதும் வீழ்ச்சி கிடையாது. சற்று பருகினாலே வைகுண்ட லோக வாஸத்தை அருளுகிறாய். உனது பிரவாஹத்தில் ஸ்னாநம் செய்தவருக்கு இந்திரபதவி கூட எளிதாயிற்றே!

7.பகவதி தவ தீரே நீரமாத்ராசனோsஹம்

விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி !

ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே

தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத !!

ஹே கங்காதேவி!பகவதி!மினுமினுப்பான அலைகள் கொண்டவளே!ஸகலபாபங்களையும் அகற்றுபவளே!ஸ்வாகத்தின் படிக்கட்டாக அமைந்தவளே!எனக்கு மனமிரங்கமாட்டாயா?உனது கரையோரம் உன் நீரை மட்டும் பருகிக்கொண்டு, பற்று அற்றவனாய், ஸ்ரீகிருஷ்ணனை ஆராதிக்கிறேனே!அனுமதியேன்.

8.மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே மௌலௌ நிதாயாஞ்ஜலிம்

த்வத்தீரே வபுக்ஷே£sவஸானஸமயே நாராயணாங்கரித்வயம் !

ஸாநந்தம் ஸ்மரதோ பவிஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே

பூயாத் பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ !!

கங்காமாதாவே!ஸ்ரீசங்கரரின் தொடர்புடையவளே!உன்னை பிரார்த்திக்கிறேன். உனது கரையில் தங்கி தலை மேல் கைகூப்பிக்கொண்டு, உடல் பட்டுப்போகும் நேரத்தில் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை தியானித்துக்கொண்டு ஆனந்தமாய் கழிக்கும் நேரம் பிராணவியோகமும் நேரலாம். அப்பொழுது ஹரியும்,

ஹரனும் ஒன்று, என்றே அசையாத (நிலையான) பக்தி எனக்கு உண்டாக வேண்டுமே.

9.கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி

ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி !!

புண்ணியமான இந்த கங்காஷ்டகத்தை சித்த சுத்தியுடன் படிப்பவர் பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.

கங்காஷ்டகம் முற்றிற்று.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam

Apr 30, 2017

தோடகாஷ்டகம்




ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.

அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை விதந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.

ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டக சுலோகமும் அதன் அர்த்தமும் இனி பார்க்கலாம்.

விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். 
என்னை ஞாநவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.

பவதா ஜனதா ஸுகிதா பவிதா
நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிகமே சரணம்!!

தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!

பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெளதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!

ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும் நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ
பவசங்கர தேசிக மே சரணம்!!

குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

குருபுங்க புங்கவ கேதந தே
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

விகிதா ந மயா விசதைககலா
நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam