உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி. தை மாத வளர்பிறையில் ஏழாவது நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.
சூரிய த்வாதச நாமாவளி
1. ஓம் மித்ராய நம :
2. ஓம் ரவயே நம :
3. ஓம் சூர்யாய நம :
4. ஓம் பானவே நம :
5. ஓம் ககாய நம :
6. ஓம் பூஷ்ணே நம :
7. ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம :
8. ஓம் மரீசயே நம :
9. ஓம் ஆதித்யாய நம :
10. ஓம் சவித்ரே நம :
11. ஓம் அர்க்காய நம :
12. ஓம் பாஸ்கராய நம :
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம :
காலையில் சூரியன் இருக்கும் கிழக்கு திசையினை நோக்கி இந்த 12 மந்திரங்களையும் கூறி நமஸ்காரம் செய்ய வேண்டும்.
சூரியபகவானுக்கு சர்க்கரைப் பொங்கலும் வடையும் படைத்து வழிபட வேண்டும். இந்த வழி பாட்டால் ஆரோக்கியமும், மாங்கல்ய பாக்கியமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment