மக அமாவாசை அன்றே வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். வீடு முழுவதும்
கங்கா ஜலம் தெளிக்க வேண்டும். பின் பிரதமை அன்று அதிகாலையில்
எழுந்து நீராடி, மாவிலை தோரணங்களை கட்ட வேண்டும். அன்னைக்கு ஒரு மண்டபம் நியமனம் செய்து அதற்கு சிவப்பு வஸ்திரத்தை சாற்ற வேண்டும்.
அந்த மண்டபத்தில் துர்காதேவி/ ஸ்யாமளா தேவியை கும்பத்தில்
ஆவாஹநம் செய்ய வேண்டும். தீபங்கள் ஏற்றி, அன்னைக்கு வளையல், மஞ்சள், குங்குமம்,
கண்ணாடி, சரடு போன்ற மங்கள பொருட்களை வைக்க வேண்டும்.
தூப தீப ஆராதனை செய்து அன்னையை வழிபட வேண்டும். மனத்தூய்மையுடன் அன்னை ஒன்பது நாட்களும் வழிபாடு செய்ய வேண்டும். இந்த நவராத்திரி காலங்களில் தேவி மாஹாத்மியம், ஸ்ரீமத்
தேவி பாகவதம் போன்ற நூல்களை பாராயணம் செய்ய வேண்டும். மேலும்
அன்னையின் நவாக்ஷரீ மந்திரத்தை இடைவிடாமல் ஜபம் செய்ய வேண்டும். பூஜையில் எந்த விதமான ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இருக்கக் கூடாது.
இந்த நவராத்திரியில் வரும் பஞ்சமி, சரஸ்வதிக்கு
மிகவும் விருப்பமான நாளாகும். அந்த பஞ்சமியை பஸந்த் பஞ்சமி என்று
அழைப்பார்கள். அன்று மாணவர்கள் அன்னையை வழிப்பட்டால்,
கல்வியில் சிறந்து விளங்கலாம். மேலும் ரதசப்தமி
அன்று அன்னையை குண்டலிநீ ரூபமாக வணங்கினால், உடல் நலம் சீராகும். பீஷ்மாஷ்டமியில் அன்னையை வணங்கினால்
புத்ரசாபத்தில் இருந்து விடுபடலாம்; மேலும் சத்யவிரத குழந்தைகளை
பெறலாம்.
மஹநவமியில் நவாரண பூஜையும், தசமி அன்று
கன்யா பூஜை செய்யலாம்.
முத்தாரம்மே சரணம் !
Posted by Mutharamman Satsangam