அகில புவனத்தையும்
படைத்து அருளாட்சி புரிந்து வரும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாம் அன்னைக்கு இவ்புவனத்தில்
தான் எத்தனை கோவில்கள். தக்ஷயஞ்யத்தில் தேவியின் உடல் உறுப்புகள் சிதறி விழுந்த இடங்கள்,
நம் பாரத தேசத்தில் சக்தி பீடங்களாக உருப்பெற்றன. அவற்றில் மிகவும் சிறப்புமிக்க ஒருசக்தி
திருத்தலம் திருச்செந்தூருக்கு அருகாமையில் உள்ள குலசேகரப்பட்டிணம்.
லலிதா சகஸ்ரநாமத்தில்,
“ஸுதா சாகர மத்யஸ்தா காமாக்ஷி காமதாயினீ” என்று ஒரு நாமம் வருகிறது. அதாவது, அமிர்த
கடலின் நடுவில் வீற்றிருந்து தன் அழகான கண்களால் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றி
வைக்கிறாள் என்பதாகும். அவ்வாறே அன்னை முத்தாரம்மன் அலைப்பாயும் கடலோரம் கோவில் கொண்டு
தன் விழிகளாலே பக்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறாள்.
மற்றொருக் கோணத்தில்
பார்த்தால், ஸாகரம் என்னும் கடல் நம் ஸம்சார வாழ்க்கையை நினைவுப்படுத்தும். இந்த ஸம்சார
சாகரத்தில் ஜீவாத்மாக்களாகிய நாம் விடப்பட்டு வாழ வழித்தெரியாமல் தத்தளித்து வருகிறோம்.
சிலர் மூழ்கும் நிலையில் உள்ளோம். அப்படி அலைப்பாயும் சம்சார சாகரத்தில் அவதிப்படுபவர்களையும்,
புதைந்தவர்களையும் கரையேற்றி ஞானத்தை அளித்து, முக்தியை வழங்குவதற்காகவே அம்மை ஞானமூர்த்தீஸ்வரருடன்
சேர்ந்து அருள்பாலிக்கிறாள் அன்னை முத்தாரம்மன். இதை, ஸம்சார பங்க நிர்மக்ந ஸமுத்தரண
பண்டிதா” என்னும் அவள் ஸகஸ்ரநாமம் உறுதிப்படுத்துகிறது.
அன்னையை வழிபடுவோம்
ஸம்சார சாகரத்தில் இருந்து விடுபடுவோம் !
……………………….(அன்னை
அருள் பொங்கும்)
(ஸ்ரீ முத்தாரம்பிகை மாஹாத்மியம் என்னும் தொடரில் இருந்து எடுக்கப்பட்டது)
Posted by Mutharamman Satsangam
(ஸ்ரீ முத்தாரம்பிகை மாஹாத்மியம் என்னும் தொடரில் இருந்து எடுக்கப்பட்டது)
Posted by Mutharamman Satsangam
No comments:
Post a Comment