வைகாசி மாத சுக்ல பட்ச திருதியை திதி ரம்பா திருதியை ஆகும். சில சமயங்களில் ஆனி மாதத்திலும் வருவதுண்டு. கார்த்திகை சுக்ல பட்ச திருதியையிலும் சிலர் இவ்விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். இன்று ரம்பா திரிதியை விரதம் கடைபிடிக்கப்படுகிறது. வட இந்தியாவில் இந்த விரதம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
வைகாசி மாத சுக்பல பட்ச திருதியை திதி ரம்பா திருதியை அன்று ரம்பாவிரதம் என்னும் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். ரம்பா என்றால் வாழை என்ற அர்த்தமும் உண்டு. நாலாபுறமும் வாழை மரங்கள் கட்டி, நடுவில் தேவியின் படம் வைத்து நிறைய வாழைப் பழங்களையும் நெய்யில் பக்குவப்படுத்தப்பட்ட பட்சணங்களையும் நிவேதனம் செய்ய வேண்டும். பூஜை செய்த பிறகு பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நிவேதனம் செய்த வாழைப் பழங்களையும் பட்சணங்களையும் தானம் செய்ய வேண்டும்.
பெண்கள் தனியாகவோ கணவருடன் சேர்ந்தோ இந்த ரம்பா விரதம் பூஜைச் செய்யலாம். அருகில் உள்ள அம்மன் சன்னதிகளுக்குச் சென்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து வீட்டுக்கு வந்து ஆரத்தி செய்த பிறகு அணிதல் வேண்டும்.
தந்நோ கவுரி பிரசோதயாத் !
என்ற காயத்ரி மந்திரத்தை மூன்று முறை சொல்லி, பெண்கள் சேர்ந்து, மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.
கவுரியே உனக்கு நமஸ்காரம்
கந்தனின் தாயே நமஸ்காரம்
காளினி நீயே நமஸ்காரம்
பொன்னைத் தருவாய் நமஸ்காரம்
பொலிவையும் அருள்வாய் நமஸ்காரம்
பூஜைகள் ஏற்பாய் நமஸ்காரம்
நம் தேசத்தில் கவுரி தேவியின் கோயில்கள், பார்வதி, அம்பிகை, மகாலட்சுமி சன்னதிகளில் ரம்பா திருதியை அன்று விசேட தரிசனங்களைச் செய்து வழிபட்டு வரலாம். குறிப்பாக ரம்பா திருதியை தொடர்புடைய கோயில்களாக கேரளாவில் சேர்த்தலையில் ராஜ கோபுரத்துடன் கூடிய கார்த்தியாயினி கவுரி தேவி, திருவாரூர் மாவட்டத்தில் தில்லையாடி, காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் சன்னதி, தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை கார்த்தியாயனி கோயில், கர்நாடகாவில் மகாலட்சுமி கோயில், தேனி மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி கார்த்தியாயினி, கேரளத்து ஆலப்புழா சாலையில் விசேஷ சன்னதி மும்பை நெருன் 18 அடி உயர கார்த்திகாயினி ரூபம். தென்சென்னையில் குன்றத்தூர், சென்னை - திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி ஆகிய இடங்களில், விசேட அலங்கார தரிசன சேவை செய்யலாம்.
பலன்கள்:
- இந்த பூஜை செய்வதால் நல்ல கணவன், நீண்ட ஆயுள், நல்ல குழந்தை, நல்ல வீடு, முதலியவற்றை அடைவார்கள்.
- திருமணமான பெண்களும், திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருப்பது மிகுந்த பலனைத் தரும். இந்த நாளில் தங்கத்தை வாங்குவதும் வாங்கிய தங்கத்தை அணிந்து லட்சுமியை வணங்குவது மிகவும் சிறப்பானது.
- இந்த நாளில் கன்னிப் பெண்கள் லட்சுமி தேவியை பூஜை செய்து வணங்கினால் திருமணத்துக்குத் தேவையான தங்க நகைகள் சேரும் என்பது நம்பிக்கை.
- பெண்களுக்கு அழகும் முகவசீகரமும், தங்க நகை சேரும் பாக்கியமும் கிடைக்கும். பரத நாட்டியம், மற்ற ஆடல் கலைகளில் மிளிர்ந்திட, இந்த நாளில் கவுரி பூஜையுடன் ரம்பாதேவி பூஜையும் செய்யவேண்டும்.
முத்தாரம்மே சரனம் !
Shared by Mutharamman Satsangam