May 10, 2017

முத்தாரம்மன் திருக்கோவிலில் சித்திரை வசந்த விழா (11.05.2017, 12.05.2017)


உத்தராயண காலத்தின் (தை- ஆனி) நடுவில் வருவது வசந்த ருது (சித்திரை). தட்சிணாயண காலத்தின் (ஆடி- மார்கழி) நடுவில் வருவது சரத் ருது (புரட்டாசி). இவ்விரு பருவ காலங்களும் எமதர்மனின் இரு கோரைப்பற்களைக் குறிக்கும் என்று தேவி பாகவதம் சொல்கிறது. இக்காலங்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை. அவற்றிலிருந்து  நம்மை காப்பாற்றுபவள் அம்பிகை என்பதால், அவளுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு செய்யும் வழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். எனவே, சித்திரையில் வசந்த விழா, புரட்டாசியில் தசரா விழா என்று மிகவும் சிறப்பாக தேவிக்கு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

ஆறு ருதுக்களில் சிறந்ததாக சொல்லப்படும் வசந்த ருதுவில், முத்தாரம்மைக்கு நடத்தப்படுவது வசந்த விழா.

அவ்வகையில், இவ்வருடம் குலசேகரப்பட்டிணம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில், சித்திரை வசந்த விழா 11.05.2017, 12.05.2017 ஆகிய இரு தினங்களிலும் கொண்டாடப்படுகிறது.

Image result for homam
மே 11-ம் தேதி காலை 7.30 மணிக்கு விக்நேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கி, தொடர்ந்து புண்யாஹவாசனம், கணபதி ஹோமம், சிறப்பு தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

Image result for sumangali pujaஅதனைத் தொடர்ந்து, 9 மணிக்கு, குபேர ஹோமம், நவக்ரஹ ஹோமம், கோ பூஜை, லக்ஷ்மி ஹோமம், ஆகியவை நடைபெறுகிறது.

பின்னர், 1008 கலச பூஜை, திருமுறை பாராயணம், ஸ்வாமி அம்பாளுக்கான ஹோமங்கள் நடைபெறும். பகல் 12 மணிக்கு, 1008 கலசாபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் நடைபெறும். மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜை நடைபெறுகிறது.


Image result for sangu abhishekamமே 12-ம் தேதி காலை 6 மணிக்கு 1008 பால்குடம் கடற்கரையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும்.

Image result for Maa vilakkuபின்னர்,  பகல் 12 மணிக்கு, 1008 சங்காபிசேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும், திருமண தோஷம் விலக சிறப்பு பூஜையும் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு 5004 மாவிளக்கு பூஜை நடைபெறும்.

சித்திரை வசந்த விழாவில் அன்னையை வணங்கி நல்வாழ்வு பெறுவோம்.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam




No comments:

Post a Comment