அன்னை பராசக்தி அருளாட்சி செய்யும் அஷ்டாதச பீடங்கள் (பதினெட்டு பீடங்கள்) மிகவும் சிறப்பானவை. பொதுவாகவே, பதினெட்டு என்பது மிகச்சிறப்பான எண் என்பார்கள். அதில் தேவியின் திருவருளும் சேரும்போது அது அதி உன்னதமான பலனைத் தரும் என்பது நிச்சயம்.
ஆடி 18 ஆம் பெருக்கு அன்று, சிறப்பான பதினெட்டு சக்தி பீடநாயகிகள் பெயரைச் சொல்லி துதிப்பது பதினாறு பேறும் தரும் என்பது ஐதீகம்.
மேலும், ஆடி மாத பௌர்ணமி, ஆடி வெள்ளி போன்ற நாட்களில் துதிப்பதும் விஷேஷம். தினமும் படிப்பதால் வாழ்க்கை வளமாகும். இந்த துதியை தினமும் சாயங்காலத்தில் சொல்வதால் சகல சம்பத்தும் சேரும்.
அஷ்டாதச பீட ஸ்தோத்ரம்
லங்காயாம் சாங்கரீ தேவி காமாக்ஷி காஞ்சிகாபுரே |
ப்ரத்யும்னே ஸ்ரிங்கலாதேவி சாமுண்டி க்ரௌசபட்டணே ||
ஆலம்புரே ஜோகுலாம்பா ஸ்ரீசைலே ப்ரம்ராபிகா |
கோலாபுரே மஹாலக்ஷ்மி மாஹீர்யே ஏகவீரிகா ||
உஜ்ஜயின்யாம் மகா காளி பீடிகாயாம் புருஹ்ருதிகா |
ஒட்டபாயாம் கிரிஜாதேவீ மாணிக்யா தக்ஷவாடஹா ||
ஹரிக்ஷேத்ரே காமரூபா ப்ரயாகே மாதேஸ்வரி |
ஜ்வாலாயாம் வைஷ்ணவிதேவி கயா மங்கள கௌரிகா ||
வாரணாஸ்யாம் விசாலாக்ஷி காஸ்மீரேஷி சரஸ்வதி |
அஷ்டாதச பீடாணி யோகீனாமபி துர்லபம் ||
சாயங்காலே படேன் நித்யம் சர்வ சத்ருவிநாசகரம் |
சர்வ ஹரம் திவ்யம் ரோக சர்வ சம்பத்கரம் சுபம் ||
பொருள் :
இலங்கை சங்கரி; காஞ்சிபுரம் காமாக்ஷி; ப்ரத்யும்னம் ஸ்ருங்கலாதேவி; க்ரௌஞ்சபட்டணம் சாமுண்டி; ஆலம்புரா ஜோகுளாம்பாள்; ஸ்ரீசைலம் ப்ரம்ராம்பிகா; கோலாப்பூர் ஸ்ரீமகாலக்ஷ்மி; மாஹீரில் ஏகவீரிகா; உஜ்ஜயினி மகாகாளி; பீடிகா புருஹ்ருதிகா; அயோத்தி கிரிஜாதேவி, தட்சவாடகம் மாணிக்யா தேவி; கௌஹாத்தி காமரூபா; ப்ரயாகைமாதவேஸ்வரி. கயை மங்களகௌரி, வாரணாசி விசாலாக்ஷி; காஷ்மீரம் சரஸ்வதி என பதினெட்டு திவ்ய பீடங்களில் வசிப்பவளை; மஹாயோகிகளும் காண அரிதானவளை மனப்பூர்வமாக வணங்குகிறேன்.
தினமும் சாயங்கால நேரத்தில் இத்துதியைச் சொல்வதால் எதிரிபலம் குன்றும்; வீண் பயம் அகலும்; எல்லாத் துன்பங்களும் அகலும்; அனைத்து ரோகங்களும் குணமாகும். சகல செல்வங்களும் சேரும்.
ஓம் சக்தி !
Posted by Mutharamman Satsangam
No comments:
Post a Comment