முத்தாரம்பிகை மேல் அடியேன் எழுதி இருக்கும் இந்த அஷ்டகத்தில் பிழை ஏதும் இருந்தால், அதை பொறுத்து என்னை திருத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.
ஸ்ரீ முத்தாரம்பிகை அஷ்டகம்
ஞானப்ரதாயினி நிர்மலே தயாவிபவ காரிணீம் |
வங்கஸாகர க்ஷேத்ரநிலயே முத்தாரம்பிகே நமோஸ்துதே || 1
(ஞானத்தை வழங்குபவளும்; மாசற்றவளும்; பக்தர்களிடம் தயைக் காட்டுபவளும்; வங்கக் கடலின் கரையில் கோவில் கொண்டிருப்பவளுமான முத்தாரம்மனை வணங்குகிறேன்.)
மாயா ஸ்வரூபிணி தேவி மனசோக விநாசினி |
விஸ்வபிரமனகாரிணீ தேவி முத்தாரம்பிகே நமோஸ்துதே || 2
(மாயையின் வடிவானவளும், பக்தர்களுடைய மனத்தில் இருக்கும் சோகங்களை நீக்குபவளும், உலகம் முழுவதும் உண்டாவதற்கு காரணமானவளான முத்தாரம்மனை வணங்குகிறேன்.)
மஹிஷாஸுர நிர்நாச விதாத்ரி வரதே ஹர்ஷிணி |
தர்மசம்வர்த்தினி தேவி முத்தாரம்பிகே நமோஸ்துதே || 3
(மஹிஷாசுரனை சம்ஹரித்தவளும்; வரங்களை அள்ளித்தருபவளும், பக்தர்களுக்கு சந்தோஷத்தை தருபவளும், அறம் வளர்த்த நாயகியுமான முத்தாரம்மனை வணங்குகிறேன்.)
உத்யத்பானு ஸஹஸ்ரேணே நயத்ரயசோபிதே |
கலிதோஷஹரே தேவி முத்தாரம்பிகே நமோஸ்துதே || 4
(ஆயிரம் கோடி சூர்ய பிரகாசத்தில் ஜ்வலிப்பவளும்; மூன்று கண்களுடன் அழகாக காட்சி தருபவளும்; பக்தர்களுடைய கலிதோஷங்களை போக்குபவளுமான முத்தாரம்மனை வணங்குகிறேன்.)
ஸர்வார்த்ததாத்ரி சாவித்ரீ பக்த சௌபாக்யதாயினி |
ஸர்வவியாதிநாசினி தேவி முத்தாரம்பிகே நமோஸ்துதே || 5
(பக்தர்களுக்காக அனைத்தையும் அளிக்கும் சாவித்ரியானவளும், அனைத்து சௌபாக்கியங்களையும் அளிப்பவளும்; அனைத்து வியாதிகளையும் நீக்குபவளுமான முத்தாரம்மனை வணங்குகிறேன்.)
முக்தாஹார ஸர்வாபரண சோபிதே பகவதி சிவ ரஞ்சினி|
கைவல்யப்ரதே தேவி முத்தாரம்பிகே நமோஸ்துதே || 6
(முத்து மாலைகளாலும், பலவிதமான ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சி அளிக்கும் கல்யாண குணங்கள் நிறைந்தவளே! சிவனுக்கு ப்ரியமானவளும்; பக்தர்களுக்கு முக்தி அளிக்கும் முத்தாரம்பிகையே! உன்னை வணங்குகிறேன்.)
சிம்மவாஹினி சிவவாமபாகநிலயே விசாலாக்ஷி பயஹரி |
பக்த சந்தோஷகாரிணீ தேவி முத்தாரம்பிகே நமோஸ்துதே || 7
(சிம்மத்தை வாகனமாக கொண்டவளும்; சிவனின் இடப்புறம் அமர்ந்திருப்பவளும்; விசாலமான கண்களுடன் பக்தர்களுடைய பயத்தை போக்கி, சந்தோஷத்தை அளிப்பவளுமான முத்தாரம்மனை வணங்குகிறேன்.)
தாரித்ர்ய துக்கசமநி பவதுக்க விநாசினி |
கருணாம்ருத சாகரே தேவி முத்தாரம்பிகே நமோஸ்துதே || 8
(இம்மையில் தாரித்திரத்தையும், துக்கங்களையும் நீக்கி, மறுமையில் முக்தி அளித்து, பிறவிப்பிணியை போக்குபவளுமான சுந்தரியே! கருணைக்கடலாக விளங்கும் முத்தாரம்பிகையே! உன்னை வணங்குகிறேன்.)
பலஸ்ருதி: (நூற்பயன்)
பாலிசேந மயா ப்ரோக்தம் அபிவாத்சல்ய சாலிதோ:
ஆனந்தம் ஆதிதம்பத்யோரின்மாவர்தந்து வாங்கிர:
(அறியாத அறிவில்லாத சிறுவன் சொல்லியிருந்தாலும், அன்புவயப்பட்ட ஆதி தம்பதியருக்கு இந்த சொற்கள் ஆனந்தத்தை கூட்டுவிப்பதாக இருக்கட்டும்)
முத்தாரம்பஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வபாப விநிர்முக்தோ ஸ்ரீபுரம் ஸ கச்சதி
(முத்தாரம்பிகை அஷ்டகம் என்ற இந்த ஸ்தோத்திரத்தை பக்தியுடன் படிக்கும் பக்தன் சகல பாபங்களில் இருந்து விடுபட்டு, முடிவில் தேவியின் ஸ்ரீபுரத்தில் வாசம் செய்வான்.)
பூஜாகாலே படேத் யஸ்து ஸ்தோத்ரமேதத் ஸமாஹித:
தஸ்ய கேஹே ஸ்திரா பகவதீ ஜாயதே நாத்ர ஸம்சய:
(பூஜை நேரங்களில் இந்த ஸ்தோத்ரத்தை ஒரு மனதுடன், தேக சுத்தியுடன் படிப்பவனுடைய வீட்டில் பகவதியான முத்தாரம்பிகை நித்ய வாசம் புரிவாள் என்பதில் சந்தேகமில்லை)
முத்தாரம்மே சரணம் !
Posted by Mutharamman Satsangam
அருமை..
ReplyDeleteவாழ்த்துக்கள் தம்பி...
நன்றி அண்ணா :)
Deleteஅனைத்து வரிகளையும் படிக்கும் போது அன்னையானவல் அமிர்தத்தை நமக்கு வழங்கியது போல மற்றும் மன அமைதியை தருவதாகவும் உள்ளது. நன்றி அண்ணா
ReplyDeleteஅனைத்து வரிகளையும் படிக்கும் போது அன்னையானவல் அமிர்தத்தை நமக்கு வழங்கியது போல மற்றும் மன அமைதியை தருவதாகவும் உள்ளது. நன்றி அண்ணா
ReplyDelete